அண்ணாகண்ணன் கவிதைகள்: 2020

Wednesday, August 12, 2020

அண்ணாகண்ணன் யூடியூப் - 400 காணொலிகள்

 2007இல் என் யூடியூப் கணக்கைத் தொடங்கினாலும் இதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஒன்றிரண்டு பதிவுகளை இட்டதோடு சரி. கடந்த ஐந்து மாதங்களாக இதில் முனைப்புடன் ஈடுபட்டேன். இன்று திரும்பிப் பார்க்கையில், கடந்த ஐந்து மாதங்களில் 400 காணொலிப் பதிவுகளை ஏற்றியுள்ளேன்.


Annakannan 400 videos.jpg


இந்தப் பதிவுகள், என்றேனும் யாருக்கேனும் பயன்படலாம் என்று கருதியே வெளியிட்டு வருகிறேன். இந்தப் பதிவுகள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். இன்னும் எத்தகைய பதிவுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


https://www.youtube.com/user/annakannan


இணையுங்கள் | விரும்புங்கள் | கருத்துரையுங்கள் | பகிருங்கள்

சாணை தீட்டுவது எப்படி? | How to sharpen the knife?

கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு என்ற ஆலங்குடி சோமுவின் பாடல், டி.எம்.சௌந்தரராஜன் குரலில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், கத்தியைத் தீட்டுவதற்கும் கூர்மையான புத்தி தேவை. இங்கே, சாணை தீட்டுவது எப்படி? என்று அரிவாள்மனைகளுக்குச் சாணை தீட்டிக் காட்டுகிறார், இந்த வல்லுனர்.



 

பாய் வியாபாரி தீன் உடன் ஒரு நேர்காணல்

An interview with Mat seller Deen.



ஊரடங்கு தளர்ந்துள்ள நிலையில், பல்வேறு தொழில்களைச் சார்ந்தவர்களும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாய் வியாபாரி தீன் அவர்களை இன்று சந்தித்தேன். அவருடன் ஒரு சிறு உரையாடல்.



 

பாயும் குயில் - 3 | Diving Cuckoo - 3

களிவளர் குயிலே - மின்னும்

கவினெழு சுடரே

குளிரிளந் திருவே - வண்ணக்

குழலிசை அமுதே

 ஒளிமுகிழ் கனவே - பண்ணில்

உயிர்வளர் ஒயிலே

வெளியிது உனக்கே - நன்கு

விரித்திடு சிறகே



 

Tuesday, August 11, 2020

அபார மின்னல் | Herculean Lightning

Never seen such a lighting in my lifetime.



இன்று மாலையிலிருந்து சென்னையில் மழை, விட்டு விட்டுப் பெய்து வருகிறது. இரவு 10 மணிக்கு மொட்டை மாடிக்குப் போன போது, வியந்து போனேன். எனக்கு நினைவு தெரிந்து இப்படி ஒரு மின்னலைப் பார்த்ததில்லை. இந்தத் தொடர் மின்னல், இரவையே ஒரு கணம் பகலாக மாற்றிவிட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை இங்கே பாருங்கள்.



 

ஆள்காட்டிப் பறவை | Lapwing | Did-he-do-it?

Hear the Lapwing's voice as Did-he-do-it?

கணந்துள் என்கிற ஆள்காட்டிப் பறவை, Did-he-do-it? எனக் குரல் கொடுப்பதை இந்தப் பதிவில் கேட்கலாம். மேலும், தனது காலை வேகமாக உதறுவதையும் பார்க்கலாம்.

'எங்கே புத்தாக்கம்?': அண்ணாகண்ணன் உரை | Dr.Annakannan speech on 'Where i...

My speech on 'Where is Innovation?' in Tamil Internet Academy's virtual meet on 09.08.2020 through Teamlink.



தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் காணொலிப் பதிவு இங்கே.



நன்றி: துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்



 

Monday, August 10, 2020

குயிலை விரட்டும் காக்கை | Crow Vs Cuckoo

காக்கைக்கும் குயிலுக்கும் ஆகாது. காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவதும் ஒரு காரணம். ஆனால், குயிலைக் காக்கை சற்று விரட்டுகிறதே தவிர, மூர்க்கமாகத் தாக்குவதில்லை. இங்கே ஒரு குயிலை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் காகம் வந்து உட்கார்வதைப் பாருங்கள்.



 

புங்கை மரத்தில் ஒரு பெண்குயில் | Female Cuckoo in the Pongam Tree

A female Cuckoo is in the Pongam tree, today.



சற்றுமுன் புங்கை மரத்தில் காட்சி தந்த பெண்குயில்.



 

பூனையைத் தாக்கிய காக்கை - 4 | Crow attacks Cat - 4

நேற்று மாலை மீண்டும் அதே பூனையைக் காக்கைகள் தாக்கின. பூனை வேப்ப மரத்தில் ஏறியது. இரு காக்கைகளும் நெருங்கியதும் சடுதியில் தப்பித்து ஓடியது. பூனையின் மீது உள்ள கோபத்தை வேப்பங்கிளை மீது காக்கை காட்டியது. தன் கூரிய அலகால், கொத்து கொத்தென்று கொத்தியது. அந்தக் கொத்தின் வேகத்தை இந்தப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்.



 

Sunday, August 09, 2020

கத்திரிச் செடி நடவு | Brinjal plantation

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், டைடல் பார்க் தொழில்நுட்ப வளாகத்தில் உள்ள சிஃபி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது ஒருநாள், நடமாடும் ரத்த வங்கி எங்கள் வளாகத்துக்கு வந்தது. அதில் நானும் நண்பர் ஜனார்த்தனும் ரத்தம் கொடுத்தோம். நான் ரத்த தானம் செய்தபோது, நண்பர் படமெடுத்தார். அவர் கொடுக்கும்போது நான் எடுத்தேன். அப்போது ரத்த வங்கி அலுவலர், அதை ஊக்குவித்தார். நீங்கள் படம் எடுத்துப் பகிர்ந்தால், இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும். நாமும் இப்படி ரத்தம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். எனவே, படம் எடுங்கள் என்றார்.



 இன்றைக்கு எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில், நீட்டுக் கத்திரி, குண்டு கத்திரி என இரு வகைக் கத்திரிச் செடிகளை நட்டோம். இதுபோல் நீங்களும் செய்யலாம் என்று ஊக்குவிக்கவே, எப்படிச் செய்யலாம் என்று காட்டவே இத்தகைய நிகழ்வுகளைப் படம் எடுத்துப் பகிர்கின்றோம். பாருங்கள், செய்யுங்கள்.

தொட்டிக்குத் துளையிடுவது எப்படி? | How to make hole in the plastic conta...

பிளாஸ்டிக் தொட்டியில் செடி நடுவதற்கு முன், அதில் துளையிடுவது அவசியம். அப்போதுதான் கூடுதல் தண்ணீர் வெளியேறும். ஏதாவது ஒரு கூரான பொருளால் குத்தினால், பிளாஸ்டிக் பிளந்துவிடும். எனவே, சூடான கம்பியால் துளையிட வேண்டும். அதை எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பாருங்கள்.



 

சின்னானின் குரல் | The voice of Red-vented Bulbul

Hear the voice of Red-vented Bulbul.



சின்னான் பறவையை முன்பு படமெடுத்துப் பகிர்ந்திருந்தேன். இதோ, சின்னானின் குரலைக் கேளுங்கள்.



 

Petunia Dianthus

Petunia Dianthus, this is a beautiful, colorful, cheerful flower, which I saw in the nursery. In every stage of growth, the colors and shapes are getting changed.



 செடிகள் வளர்ப்பகத்தில் இதை நேற்று பார்த்தேன். பெட்டுனியா டயந்தஸ் (Petunia Dianthus) என்பது இதன் பெயர். இதை அதிக வெயிலில் வைக்கக் கூடாது. வெயிலும் நிழலும் கலந்தாற்போன்ற இடத்தில் வைக்க வேண்டும் என்றார்கள். இது ஒரு புதுமையான அழகுடன் காட்சியளிக்கிறது.



 

Saturday, August 08, 2020

Personal Protective Equipment (PPE) kit - In making | Corona protective ...

An interview with the tailor who is making Personal Protective Equipment (PPE) kit.



 கொரோனா / கோவிட்-19 நோயாளிகளை நெருங்கி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் அணியும் பிபிஇ கிட் எனப்படும் Personal Protective Equipment (PPE) kit ஆடையைத் தயாரிக்கும் தையல் கலைஞர் ஒருவரை இன்று சந்தித்தேன். இந்த ஆடையைத் தயாரிப்பது பற்றி அவரிடம் ஒரு சிறு நேர்காணல்.

ஜோடி வண்ணத்துப்பூச்சிகள் | Dual butterflies

துரத்தித் துரத்திக் காதலிப்பது என்றால், இதுதானா?



 

கோவைப் பழம் | Coccinia Indica

சிலரது இதழ்களுக்கு உவமை கூறப்படும் கோவைப் பழம், இதுதான்.



 

பாயும் குயில் - 2 | Diving Cuckoo - 2

இந்தக் குயில், பறந்து பறந்து வானில் வரைந்து காட்டுவது என்ன?



What this Cuckoo is writing in the sky through her feathers?



 

Friday, August 07, 2020

Trumpet Creeper at our garden

Campsis radicans, the trumpet vine or trumpet creeper (also known in North America as cow itch vine or hummingbird vine), is a species of flowering plant of the family Bignoniaceae, native to the United States and Canada, Europe and Latin America. The flowers are very attractive to hummingbirds, and many types of birds like to nest in the dense foliage.



நம் ஊர் ஒலிபெருக்கியைப் போல் இருக்கும் இந்தப் பூ, மேற்கத்திய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. இதை என் மனைவி, தேடிப் பிடித்து வாங்கி வந்து நட்டார். பூப்பதற்குச் சிறிது காலம் எடுத்தாலும், இப்போது நன்றாகப் பூக்கத் தொடங்கிவிட்டது.



 

Nithila Annakannan Ideas - 2: Laser Mosquito net

என் மகள் நித்திலாவின் புதிய யோசனை: லேசர் கொசுவலை.



My daughter Nithila Annakannan has shared her idea to solve the mosquito issue.



 

Thursday, August 06, 2020

தவிட்டுக் குருவிகளின் அந்தப்புரம்

ஒரே மரத்தில், ஒரே கிளையில் இத்தனை தவிட்டுக் குருவிகளா என வியப்பு வளர்கிறது. கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என அவை சிரித்துப் பேசி, வரிசை கட்டி, இடித்துப் பிடித்து, தாவிக் குதித்து, கொஞ்சிக் குலாவி மகிழ்வதைக் காணச் சிலிர்ப்பு எழுகிறது.

வேப்பங்கொழுந்து | Neem leaves

வேப்பிலைக்கு மருத்துவக் குணங்கள் மிகுதி. வேப்பிலை, அம்மனுக்கு மிக உகந்தது. அவள், வேப்பிலை ஆடை கட்டி ஆடுவாள். வேப்பிலைக்காரி என மக்கள் அம்மனை அழைப்பர். அம்மன் கோவில்களில் ஊற்றும் கூழிலும் வேப்பிலையை இடுவர்.

வீட்டு வாசலில் வேப்பிலையைச் செருகினால், அதுவே வீட்டுக்குக் காவலாக இருக்கும். எனவே தான், பலர் வீடுகளில் முன்னும் பின்னும் சுற்றிலும் வேப்ப மரங்களை நட்டு வளர்ப்பர். எங்கள் வீட்டின் முன்னும் பின்னும் வேப்ப மரங்கள் உண்டு.அவற்றிலிருந்து நாங்கள் அவ்வப்போது வேப்பிலையைப் பறித்துப் பச்சையாகவே உண்போம்.

மேலும், வேப்பிலையின் அழகு தனித்துவமானது. வேப்பிலையின் நுனியைப் பார்த்தால், அதுவே சூலம் போல் நிற்கும். இதே வடிவில் ஓர் ஆயுதம் செய்யலாம் என்றுகூட நான் நினைப்பது உண்டு,

ஆடி வெள்ளி தருணத்தில், வேப்பங்கொழுந்தின் அழகைத் தனியே படமெடுத்து வந்தேன். கோவிலுக்குப் போக முடியவில்லையே எனக் கவலை வேண்டாம். இதிலேயே நீங்கள் அம்மனைத் தரிசிக்கலாம்.

பெயர் என்ன? - 4 | Find the name - 4

எங்கள் வீட்டருகே மதிலோரம் இந்தப் பூவைக் கண்டேன். மிகச் சிறிதாக, ஒரு பொட்டைப் போல, பெண்களின் காதணி போல இருக்கக் கண்டேன். இதன் பெயர், உங்களுக்குத் தெரியுமா?



 

மியாவ் மியாவ் | Meow Meow

இன்று காலை வீட்டருகே நின்று படமெடுத்துக்கொண்டிருந்த போது, இந்தப் பூனைகள் இரண்டும் என் காலை நக்குவது போல் நெருங்கி வந்தன. நான் சற்று விலகிக்கொண்டேன். அவை விளையாடும் மனநிலையில் இருந்தன போலும்.



 

Wednesday, August 05, 2020

Sunset at Chennai - 16

Sunset at Chennai today.

சென்னையின் இன்றைய சூரிய அஸ்தமனம்.


அருமருந்து ஆவாரம்பூ | Aavaarampoo for Diabetes | Senna auriculata |

”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி. ஆவாரம்பூ, சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகும். நீரிழிவு மட்டுமின்றி, மேக நோய்கள், நீர்க்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

நீரில் ஆவாரம் பூக்களை இட்டு அல்லது காயவைத்த ஆவாரம்பூப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இதன் மூலம் உடல் சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

சங்க இலக்கியத்தில் ஆவாரம்பூவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகை மலர்களுள் இதுவும் ஒன்று. மேலும் கலித்தொகை, அகநானூறு ஆகியவற்றிலும் இதைப் பாடியுள்ளனர்.

ஆவாரம்பூவை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Tuesday, August 04, 2020

பூனையைத் தாக்கிய காக்கை - 3 | Crow attacks Cat - 3

இன்று மாலை, வேப்ப மரத்தடியில் சிக்கிய ஒரு பூனையைக் காக்கைகள் இரண்டும் சுற்றி வளைத்துத் தாக்கின. ஆனால், இது வேறு பூனை. நேற்று வந்தது வேறு பூனை. வார்டன் என்றாலே அடிப்போம் என்பது போல், பூனை என்றாலே தாக்குவது என்ற முடிவுக்குக் காக்கைகள் வந்துவிட்டனவா? அல்லது இந்தப் பூனையும் காக்கைக்கு ஏதாவது துன்பம் விளைவித்ததா என்று தெரியவில்லை.



இந்தப் பூனை, சற்றே பெரியது. ஆனால், காக்கைகளின் ஆக்ரோஷம், அதை விடப் பெரியது. ஒரு துன்பம் விளைத்தால், அது துரத்தித் துரத்தி வந்து தாக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.



 

குயிலின் அமுத கானம் - 5 | Singing Cuckoo - 5

புங்கை மரத்தில் அமர்ந்து, இந்த ஜோடிக் குயில் இசைக்கும் அமுத கானம், கேளீர்.



கொட்டாவி விடும் குயில் - 2 | Yawning Cuckoo - 2

அற்புதமான ஆடிக் காற்றை வேப்ப மரத்தில் அமர்ந்து அனுபவித்தபடி, கொட்டாவி விடுகிறது இந்தக் குயில்.



இந்தக் குயிலைப் பார்க்கும்போது, நீண்ட கறுப்பு அங்கி அணிந்த ஒருவர் நிற்பதுபோல் எனக்குத் தெரிகிறது. உங்களுக்கும் அப்படித் தெரிகிறதா?



வெந்தயம், கொத்துமல்லி விதைப்பு | Fenugreek, Coriander seedling

எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் காலி தயிர் டப்பாக்களில் வெந்தயம், கொத்துமல்லி விதைகளை இன்று விதைத்தோம். டப்பா அல்லது தொட்டி மண்ணில் விதைத்து அறுவடை செய்த பிறகு, அதே மண்ணில் மீண்டும் விதைக்கலாமா என்று சுதா மாதவன் கேட்டிருந்தார். அதற்கும் இந்தப் பதிவில் பதில் சொல்லியிருக்கிறோம்.



 

உய்

எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய
செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் - மெய்யமுது
உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு
நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து!