அடங்கவில்லை!
திமிறிக்கொண்டு வந்தது!
சுற்றுச் சூழலை மறந்தேன்!
என்றாலும்
வெளிச்சம் இருக்கிறது.
மனிதர்களும் இருக்கிறார்கள்.
ஓட்டமான ஓட்டம் எடுத்தேன்.
உரிய இடம் வந்துவிட்டது.
உப்பிய பலூனிலிருந்து
காற்றை விடுவிப்பது போல்
விடுதலை கொடுத்தேன்...
அப்பாடா!
மேல் முதுகுத் தண்டு
திடுக்கென்று சிலிர்த்ததில்
சல்லடை சிலுப்பியதுபோல்
வளைந்து வளைந்து
மண்ணில் விழுந்தது
சிறுநீர்!
4 comments:
அன்புள்ள கண்ணன்,இந்த புது வீடு நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!
இந்த கவிதைகூட முதல் வரிகளைப்படிக்கப்படிக்க ஏதேதோ கற்பனையில் என்னைக் கொண்டு போய் கடைசியில் குபீரென்று சிரிக்கவைத்துவிட்டது.
கவிதை நல்லா இருக்கு.
அன்புடன், ஜெயந்தி சங்கர்
நெசந்தானுங்க!
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க,
ஆத்திரத்த அடக்கினாலும் ............ அடக்கமுடியாதுன்னு!
- ஞானபீடம். <<== some more green here!
உண்மை உண்மை
முற்றிலும் உண்மை
அனுபவித்திருக்கிறேன்!
அந்த சுகத்தை!
பிரமாதமான கவிதை!
Post a Comment