அண்ணாகண்ணன் கவிதைகள்: புள்ளிக் கவிதைகள் - பகுதி 3

Wednesday, October 01, 2008

புள்ளிக் கவிதைகள் - பகுதி 3



நெடுநேரமாய்க்
கரைகிறது காகம்.
விருந்தே நீ
என்று வருவாய்?

=======================

என் உயிரை உடலுடன்
தைப்பதால்தானோ
நீ
தையல்?!

=======================

வானில் படபடக்கும்
பட்டம் நான்.
என் நூல்
இதோ உன்னிடம்.

=======================

உன் நினைவலைகளில்
நீந்தும் சிறு மீன் நான்.
கடல் எதற்கு?
உன் தொட்டி(ல்) போதும் எனக்கு.

=======================

என் எழுத்தைப் படித்து,
'கவிதை கவிதை' என்றாய்.
உன் பெயரை ஏன்
இரு முறை சொன்னாய்?
அது இங்கே
இரு நூறு முறை
எதிரொலிக்கிறது.

=======================

படம்: Sunset at the North Pole with the moon at its closest point.

No comments: