"மரணத்தின் கண்களில் மையெழுதுவேன்நான்
வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப்
பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை
மெய்யுண்ணும்; மெய்யினையோ நான்." - அ.க.
Sunday, July 15, 2007
மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்)
வாசிக்கக் கல்விச் சாலை
வயிற்றுக்கு நல்ல சோறு!
தேசத்தின் வளத்தைக் கூட்ட
திக்கெட்டும் அணைகள்! ஆலை!
யோசிக்கும் நொடியில் இந்த
யுகம்வெல்லும் மனித நேயர்!
மாசில்லை எனப்பார் போற்றும்
மகராசர் காம ராசர்!
வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
வகுப்புகள் ஆறே கற்றார்!
பாட்டாளி அவரின் பேரில்
பல்கலைக் கழகம் இன்று!
வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
மீட்பராய் வந்து காத்தார்!
நேயத்தின் எளிய செல்வர்
நிகரில்லாக் காம ராசர்!
---------------------------------
ராணி காமிக்ஸ் இதழில் (2002இல் என்று நினைவு) வெளிவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவரைப்பற்றிய இந்த இனிய கவிதையை இட்டதற்கு மிக்க நன்றி அண்ணாகண்ணன்.
தலைவர்ன்னா தலைவர் அவர்தான்
தலைவனாம் தலைவனாம்
தமிழருக்கெல்லாம் தலைவனாம்
தன்னலமில்லாத் தலைவனாம்
தரணிபோற்றும் தலைவனாம்
சொல்லிக் கொடுத்த தலைவனாம்
சோறுபோட்ட தலைவனாம்
தன்னை என்றும் எண்ணாமல்
தளராதுழைத்த தலைவனாம்
நல்லா நாமும் படித்து
நாளும் அவனைப் போற்றுவோம்
கர்மவீரர் அவர் பெயரை
கன்னித்தமிழில் போற்றுவோம்.
[என்னால் முடிந்த ஒரு சிறுவர் பாடல்!]
கல்விக்குக் காமராசர்
குழந்தைகட்கு உணவ்ளித்தார்!
வெள்ளத்தில் வாடியோரை
விரைந்தோடி வாழ்வளித்தார்!
திறமையென ஏமாற்றல்
பெருமையில்லை உணரவைத்தார்!
அனைவ்ருக்கும் கல்வியுண்டு
அறிவுசால் பதவியுண்டு
திறமைவரும் தன்னாலே!
எல்லோரும் மன்னர்தாம்
மன்னரிவர் தொண்டர் என்றும்!
Dear Author,
We are from the National Library of Singapore. We would like to seek your permission to feature your blog in one of our articles. Please get back to us with your approval at primadonnatella@gmail.com
Thank you.
அருமை அண்ணாகண்ணன்.
migavum nanru
எளிமை அருமை! அனுமதித்தால் குரல்பதிவில் இடுவேன்!
அனுமதிக்கு நன்றி
பாடலை அனுப்பி இருக்கிறேன்..கேட்டு சொல்லவும்!
ஷைலஜாவின் குரலில் "மகராசர் காமராசர் (சிறுவர் பாடல்" இதோ இங்கே:
http://annakannan-kavithaigal.blogspot.com/2009/07/blog-post.html
கவிதாயினி ஷைலஜாவிற்கு நன்றி.
மிக சிறப்பு
Post a Comment