அண்ணாகண்ணன் கவிதைகள்: பாரம்

Sunday, August 27, 2006

பாரம்



உன்னிடம் பேசினேன்
பாரம் இறங்கியது.

நீ பேசினாய்
பாரம் கூடியது.

இடையில் பேசாதிருந்தோம்.
பாரம், அபாரமாகிவிட்டது.

2 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே, உங்களின் கட்டுரைகளும், நேர்காணல்களும் எப்பொழுதும் நன்றாக இருக்கின்றன.

ஆனால் கவிதையில் இன்னும் ஆழமில்லையோ என்று தோன்றுகிறது.

இந்த கவிதையிலும் ஏதோ குறைகிறது. இன்னும் நன்றாக செதுக்கியிருக்கலாமோ என்று படுகிறது.

என் எண்ணம் தவறாகவும் இருக்கலாம். ஏதோ என் மனதிற்கு பட்டதை சொன்னேன்.

இராம. வயிரவன் said...

பேசாமலிருப்பது பெரும் பாரம்தான். பேசிக்கொள்ளுதல் பெருவாரியாகக் குறைந்து விட்டது இன்றைய இயந்திர வாழ்க்கையில். ஆறு வரிகளுக்குள் ஆயிரம் அர்த்தங்கள். அதுதான் கவிதையின் மகத்துவம். உங்கள் கவிதை என்னைத் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டியது. பாராட்டுக்கள். - வயிரவன்.