அண்ணாகண்ணன் கவிதைகள்: வர வேண்டும் அவள்

Friday, February 15, 2008

வர வேண்டும் அவள்

கதவைத் திறந்து வைக்கிறேன்
காற்று மெல்ல நுழையுது
காற்றில் அவளின் நறுமணம்
மூச்சில் நிறைத்துக் கொள்கிறேன்

கனவில் வந்து சிரிக்கிறாள்
கண்கசக்கி அழுகிறாள்
நிஜத்தில் தொலைவில் இருக்கிறாள்
நெருங்கி என்று வருவளோ?

காற்றில் ஆடும் இறகுபோல் - மனம்
ஓர் இடத்தில் இல்லையே!
இரவு மிகவும் நீளுதே! - இந்தத்
தனிமை என்னைக் கொல்லுதே!

அருகிருந்த போதிலே - மனம்
அமைதி கொண்டிருந்தது!
தொலைவில் சென்று விட்டதும்
துவண்டு மிகவும் ஏங்குது!

போதும் இந்தத் தண்டனை
பூவே இங்கு வந்திடு
உனது மழலைக் குறும்புகள்
ஒவ்வொன்றாக நிகழ்த்திடு!

வலிக்காமல் என்னைக் கிள்ளடி - உன்
மெல்லிதழால் செல்லமாய்க் கடி.
வலிக்குமாறு கட்டிக் கொள்ளடி - உன்
முத்தத்தாலே என்னை மூழ்கடி!


நன்றி: தமிழ் சிஃபி காதலர் தினச் சிறப்பிதழ்

6 comments:

Nilofer Anbarasu said...

itz nice. You should have published it yesterday (Feb 14)...... would be a very apt post for a valentine day...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அழகானக் கவிதை!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Anonymous said...

வணக்கம் திரு. அண்ணாகண்ணன். நான் கல்யாண்குமார். திசைகள், இந்தியா டுடே பத்திரிகைகளில் பணியாற்றிவன். தற்போது திரைத்துறையில் இருக்கிறேன். வலைப்பதிவுக்கு நான் புதியவன். தங்களது வலைப்பூக்களைப் பார்த்தேன். மிகவும் நேர்த்தியாகவும் விஷயஞானத்தோடும் இருக்கின்றன. வாழ்த்துக்கள். எனது வலைப்பூவிற்குத் தங்களை விஜயம் செய்யுமாறு அழைக்கிறேன். பதிலிடுங்கள். நன்றி.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

Anonymous said...

nice poem keep it up.
akathiyin.blogspot.com

Anonymous said...

who is the angel, sir?

கொற்றவை said...

your pulli kavithaigal are superb...thanks for ur guidance...