அண்ணாகண்ணன் கவிதைகள்: சிறு சிறகில் ஒரு பறவை

Sunday, July 27, 2008

சிறு சிறகில் ஒரு பறவை



ஓடும் ரெயிலின் ஜன்னலோரம் நான்.

ஒரு குருவியின் சிறு சிறகு
காற்றில் மிதந்து வந்து
என் மடியில் இறங்கியது.

சட்டென
என் முகத்திற்கு நேராக உயர்ந்து
ஓர் அவசர நடனம் ஆடிவிட்டு
என் தோளில் தங்கியது.

அடுத்த விநாடி
பறந்துவிட்டது எங்கோ.

உதிர்ந்த சிறகிலும்
உயிர் வாழ்கிறது பறவை.

=====================================

படத்திற்கு நன்றி: Louise Docker from sydney, Australia

2 comments:

dondu(#11168674346665545885) said...

அருமையான கவிதை.

இது பிரமீளின் இக்கவிதையை ஞாபகப்படுத்துகிறது.

"சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது"

அதை என் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் அழகாக பிரெஞ்சில் இவ்வாறு மொழிபெயர்த்தார்:

"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"

பிரெஞ்சு கவிஞர் ப்ரெவர்தான் எழுதியிருக்க வேண்டும் என அவரது விசிறி கிரெஃபெட் முதலில் அபிப்பிராயப்பட்டார். பிறகு அது மொழிபெயர்ப்பு என்பதை உணர்ந்து ஆச்சரியம் அடைந்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

rahini said...

அருமையான கவிதை.