அண்ணாகண்ணன் கவிதைகள்: எஃப் தொலைக்காட்சி

Sunday, January 07, 2007

எஃப் தொலைக்காட்சி



நூல் சேலை இங்கே
நூலே ஆடை அங்கே.

மறைப்பதற்காக அணிந்தனர் அன்று
காட்டுவதற்காகவே அணிகின்றனர் இன்று

நடந்துகொண்டே இருக்கிறார்கள்
நிற்கவேயில்லை
மனத்தில்.

அய்யா ஒளிப்பதிவாளரே!
பாவம் அவர்கள்.
முகத்தையும் காட்டுங்கள்!

தொழிற்சாலைப் பண்டமாய் அழகு
ஒப்பனைப் பெண்டிர் ஊர்வலம்
செய்கை அனைத்தும் செயற்கை.

வெளிப்படையாக நடக்கிறார்கள்.
அதை இங்கே
ரகசியமாகப் பார்க்கிறார்கள்.

திறந்துவைத்த பண்டம்
ஈக்கள் மொய்க்கின்றன
'களை' கட்டுகிறது வணிகம்!

2 comments:

சுந்தர் / Sundar said...

//திறந்துவைத்த பண்டம்
ஈக்கள் மொய்க்கின்றன
'களை' கட்டுகிறது வணிகம்! //

அருமை .. வாழ்த்துக்கள்

விஜயன் said...

//அய்யா ஒளிப்பதிவாளரே!
பாவம் அவர்கள்.
முகத்தையும் காட்டுங்கள்!//


அய்யா சாமி நீங்க வேற எதப் பாக்கறீங்க??


நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்