அண்ணாகண்ணன் கவிதைகள்: இதுவா? அதுவா?

Monday, January 01, 2007

இதுவா? அதுவா?

Photobucket - Video and Image Hosting

காபிக்கும் தேநீருக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை

வீணை இசைக்கும் சிதார் இசைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

நட்பையும் காதலையும் பிரித்தறிய முடியவில்லை

காதலையும் காமத்தையும்கூட.


இப்போது தொலைபேசியில் பேசுபவர் எந்தச் சீனிவாசன்?

பரிமாணமா? பரிணாமமா?

weatherஆ? whetherஆ?

இப்போது நான் அணிந்திருக்கும் சட்டை என்னுடையதா? என் தம்பியுடையதா?



இந்த இனிப்புக்குப் பெயர் என்ன? ஜாங்கிரியா? ஜிலேபியா?

நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்த என் வாகனம் எங்கே?

ஒரே நிற மேசை, இருக்கைகள் கொண்ட என் அலுவலகத்தில் என் இருக்கை எது?

துயில் நீங்கிய வேளையில் நான் காண்பது காலையா? மாலையா?


என் தோட்டத்தில் மேயும் எல்லா ஆடுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

ஆடுகள் மட்டுமா?

4 comments:

bala said...

//என் தோட்டத்தில் மேயும் எல்லா ஆடுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.//


அண்ணாகண்ணன் அய்யா,

ஆடுகள் எல்லாம் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கலாம் ஆனால் ஒரே ஒரு ஆடு மட்டும், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்.அந்த ஓநாய்க்கு பேர் மறு காலனி ஆதிக்க சக்தி.அந்த ஆடு தோல் போர்த்திய ஓநாய் என்ன பண்ணும்னு நினக்கறீங்க இல்லையா/ அது மோகினி ஆட்டம் ஆடி மத்த ஆடுகளை மயக்கும்.மத்த ஆடுகள் மயங்கி விழுந்த உடனே..
அய்யோ குலை நடுங்குதே..
பாலா

மனசு... said...

அருமை... உவமைகளும் உருவகங்களும் அருமை... சுத்தத் தமிழில் எழுதியிருக்கிறீர்கள்.... உங்களின் கவனத்திற்கு.... காபி என்பதை குளம்பி என்று எழுதியிருக்கலாம். பள்ளியில் எனது தமிழ் ஐயா சொல்லிகொடுத்த வார்த்தை... இதுமட்டுமல்ல இன்னும் நிறைய அன்றாடம் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் நாம் மறந்து போன வார்த்தைகள் நிறைய உண்டு...

வாழ்த்துக்கள்...

மனசு...

ஷைலஜா said...

அழகிய இந்தக் கவிதையை எழுதியது அண்ணாவா கண்ணனா?:)
ஷைலஜா

Anonymous said...

//காபி என்பதை குளம்பி என்று எழுதியிருக்கலாம்.//

ம்..அப்புறம்..?, ஜிலேபி, ஜாங்கிரிகளை மாற்றச் சொல்ல மறந்துட்டீங்களே, மனசு!

சு.வி