அண்ணாகண்ணன் கவிதைகள்: வேப்பங்கொழுந்து | Neem leaves

Thursday, August 06, 2020

வேப்பங்கொழுந்து | Neem leaves

வேப்பிலைக்கு மருத்துவக் குணங்கள் மிகுதி. வேப்பிலை, அம்மனுக்கு மிக உகந்தது. அவள், வேப்பிலை ஆடை கட்டி ஆடுவாள். வேப்பிலைக்காரி என மக்கள் அம்மனை அழைப்பர். அம்மன் கோவில்களில் ஊற்றும் கூழிலும் வேப்பிலையை இடுவர்.

வீட்டு வாசலில் வேப்பிலையைச் செருகினால், அதுவே வீட்டுக்குக் காவலாக இருக்கும். எனவே தான், பலர் வீடுகளில் முன்னும் பின்னும் சுற்றிலும் வேப்ப மரங்களை நட்டு வளர்ப்பர். எங்கள் வீட்டின் முன்னும் பின்னும் வேப்ப மரங்கள் உண்டு.அவற்றிலிருந்து நாங்கள் அவ்வப்போது வேப்பிலையைப் பறித்துப் பச்சையாகவே உண்போம்.

மேலும், வேப்பிலையின் அழகு தனித்துவமானது. வேப்பிலையின் நுனியைப் பார்த்தால், அதுவே சூலம் போல் நிற்கும். இதே வடிவில் ஓர் ஆயுதம் செய்யலாம் என்றுகூட நான் நினைப்பது உண்டு,

ஆடி வெள்ளி தருணத்தில், வேப்பங்கொழுந்தின் அழகைத் தனியே படமெடுத்து வந்தேன். கோவிலுக்குப் போக முடியவில்லையே எனக் கவலை வேண்டாம். இதிலேயே நீங்கள் அம்மனைத் தரிசிக்கலாம்.

No comments: