பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், டைடல் பார்க் தொழில்நுட்ப வளாகத்தில் உள்ள சிஃபி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது ஒருநாள், நடமாடும் ரத்த வங்கி எங்கள் வளாகத்துக்கு வந்தது. அதில் நானும் நண்பர் ஜனார்த்தனும் ரத்தம் கொடுத்தோம். நான் ரத்த தானம் செய்தபோது, நண்பர் படமெடுத்தார். அவர் கொடுக்கும்போது நான் எடுத்தேன். அப்போது ரத்த வங்கி அலுவலர், அதை ஊக்குவித்தார். நீங்கள் படம் எடுத்துப் பகிர்ந்தால், இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும். நாமும் இப்படி ரத்தம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். எனவே, படம் எடுங்கள் என்றார்.
இன்றைக்கு எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில், நீட்டுக் கத்திரி, குண்டு கத்திரி என இரு வகைக் கத்திரிச் செடிகளை நட்டோம். இதுபோல் நீங்களும் செய்யலாம் என்று ஊக்குவிக்கவே, எப்படிச் செய்யலாம் என்று காட்டவே இத்தகைய நிகழ்வுகளைப் படம் எடுத்துப் பகிர்கின்றோம். பாருங்கள், செய்யுங்கள்.
No comments:
Post a Comment